விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

கடையநல்லூர்:

மணிப்பூர், அரியானா வன்முறையை தடுக்க தவறிய மற்றும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து கடையநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, கடையநல்லூர் தொகுதி துணைச் செயலாளர் சதாசிவம், புளியங்குடி நகர துணை செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட துணைச் செயலாளர் சாமிதுரை, அன்சாரி, நகர பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

செய்தி தொடர்பாளர் இசக்கி பாண்டியன் வரவேற்றார். முன்னாள் மண்டல செயலாளர் தமிழ்இனியன் கண்டன உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ், மண்டல துணைச் செயலாளர் குழந்தை வள்ளுவன், தமிழ்ச்செல்வன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத் தலைவர் யாசர் கான், மாவட்ட தலைவர் சிக்கந்தர், தமிழ் புலி கட்சி மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகரச் செயலாளர் பாக்கியநாதன் நன்றி கூறினார்.


Next Story