விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
நெல்லை நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று தோகைமலையில் கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் மரு அவினாசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். இதில், கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் அறிவழகன், குளித்தலை தொகுதி செயலாளர் சுதாகர், துணை செயலாளர் லெட்சுமணன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சைமுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story