விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

அம்பேத்கருக்கு காவி, திருநீறு, குங்குமம் இட்டு அவமதிப்பதை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவர் ஆகியோரை அவமதிக்கும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் மண்ணரசன், ஊட்டி சட்டபேரவை தொகுதி செயலாளர் கட்டாரி, மாநில துணை செயலாளர் முனிரத்தினம் மற்றும் நிர்வாகிகள் மகேசன், ரபிக், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story