விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கடந்த 6-ந் தேதி கும்பகோணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அம்பேத்கரின் உருவ படத்திற்கு காவி உடை அணிவித்து திருநீறு, குங்குமம் பூசியதாகவும், இது அம்பேத்கரை அவமதித்ததை போல் இருப்பதாக கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் திருமாவேந்தன், மாத்தூர் ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். அம்பேத்கர் வளவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்டோபர், கதிர்வேல், சதீஷ், தாமஸ், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story