விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் கலா, மாவட்டசெய்தி தொடர்பாளர் கோ.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர் மு.வெற்றி கொண்டான் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டியில் மலத்தை கலந்தவர்களை கண்டித்தும், தமிழ்நாட்டில் நடக்கும் ஜாதி வன்கொடுமைகளை கண்டித்தும், மலத்தைக் கலந்த நபரை கைது செய்யக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி பிரகாசம், தொகுதி செயலாளர்கள் கோவேந்தன், அருணாச்சலம், வெங்கடேசன், நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், ரமேஷ், அண்ணாமலை உள்பட 100 ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல் நன்றி கூறினார்.


Next Story