பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் நூலகம்


பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் நூலகம்
x

நாகூர் சிவன் தெற்கு வீதியில் பராமரிப்பின்றி நூலகம் பூட்டி கிடக்கிறது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள சிவன் தெற்கு வீதியில் 1951-ம் ஆண்டு நூலகம் கட்டப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தை அந்த பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர்.மேலும் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களும், வாசகர்களும் நூலகத்திற்கு வந்து புத்தகங்கள் படித்து செல்வது வழக்கமாக இருந்தது. தற்போது இந்த நூலகம் பராமரிப்பின்றி பூட்டி கிடக்கிறது.மேலும் நூலக கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் நூலகத்தை பயன்படுத்த முடியவில்லை என மாணவர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இங்கு இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுஅருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பூட்டி கிடக்கும் நூலகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story