மாணவ-மாணவிகளுக்கு நூலக சுற்றுலா
புத்தக வாசிப்பின் மகத்துவத்தை அறிந்து கொள்ள மாணவ-மாணவிகளுக்கு நூலக சுற்றுலா
தளி
பள்ளி மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்துவதன் அவசியம், நூலகத்தில் உள்ள நூல்களை அறிந்து கொள்ளுதல் குறித்த நூலக சுற்றுலா நடைபெற்றது. உடுமலை தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்ரீஜா, அருள் செல்வி, எலிசபெத்பெனட் ஆகியோர் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2
நூலகத்திற்கு வருகை தந்து நூலகம் குறித்து அறிந்து கொண்டனர். அப்போது நூலகர் மகேந்திரன் நூலகத்தில் உள்ள நூல்கள் எவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்டு அனைவரும் பயன்படும் வகையில் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும் நூலகத்தில் உள்ள பல்வேறு வகையான நூல்கள் குறித்தும் விளக்கினார்.
நூல்களை மாணவ மாணவியர் ஆர்வமுடன் எடுத்து வாசித்தனர். அப்போது வாசிப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் நூலகத்தில் தேசத்தலைவர்கள் மற்றும் நூலகர் தின விழாவில் நடத்தப்படும் போட்டிகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதில் கலந்து கொண்டு பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் குறித்த விழிப்புணர்வை நூலகர்கள் பிரமோத் மற்றும் அஷ்ரப்சித்திகா ஆகியோர் ஏற்படுத்தினார்கள்.