எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருத்துறைப்பூண்டியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி தலைமை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தஞ்சை கோட்ட துணைத்தலைவர் செல்வக்குமார் தொடங்கி வைத்து பேசினார். வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகையின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோட்ட சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஒலிமுகமது, கார்த்திகேயன், கிளையின் மூத்த முகவர்கள் ரெத்தினசாமி, மணி, காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பொருளாளர் ஏகாம்பரநாதன் நன்றி கூறினார்.Next Story