எல்.ஐ.சி. முகவர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் எல்.ஐ.சி. முகவர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
மயிலாடுதுறை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய எல்.ஐ.சி முகவர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தங்கமலர், செயலாளர் சின்னராஜ், துணை செயலாளர் சந்தானம், பொருளாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார். .எல்.ஐ.சி பாலிசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். எல்.ஐ.சி முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு வசதி கடன் 5 சதவீதத்தில் வழங்க வேண்டும். முகவர் நலநிதி அமைக்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். முகவர்களை தொழில் முறை முகவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.