பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றிச்சென்றால் ஆட்டோ உரிமம் ரத்து


பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றிச்சென்றால் ஆட்டோ உரிமம் ரத்து
x
திருப்பூர்


திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் உள்ள திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் ஆட்டோ ஓட்டுனருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பான பயணம் செய்வதும், விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தெரிவித்தார்.

இந்த கலந்தாய் கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலரும் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story