2 பேருக்கு ஆயுள் தண்டனை


2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

மூதாட்டி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மூதாட்டி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மூதாட்டி கொலை

ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசி அம்மாள் (வயது 65). தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் செம்புலிங்கம் (வயது 23), தங்கமணி (20). இவர்கள் 2 பேரும் காசி அம்மாள் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அவரை கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றனர். மேலும் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 20 கிராம் தங்க பிஸ்கட்டையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்புலிங்கத்தையும், தங்கமணியையும் கைது செய்தனர்.

2 பேருக்கு ஆயுள்

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை நீதிபதி கஜரா ஆர் ஜி ஜி விசாரித்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story