தொழிலாளியை அடித்துக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை அடித்துக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை அடித்துக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோயம்புத்தூர்

கோவை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளியை அடித்துக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கள்ளக்காதல்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது28). இவர், கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழி லாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் அவருடைய அண்ணன் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் வெள்ளலூரை சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரைவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி, தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலன் ராஜனுடன் சென்று தனியாக வசித்து வந்தார்.

இதனால் சித்திரைவேல் வெள்ளலூருக்கு சென்று ராஜனை தட்டி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி மனம் திருந்தி ராஜனை விட்டு பிரிந்து சித்திரைவேலுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

ஆயுள் தண்டனை

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜன், தனது கள்ளக்காதலுக்கு சித்திரைவேல் இடையூறாக இருப்பதாக கருதினார். இதையடுத்து அவர், தனது கூட்டாளிகளுடன் சென்று கடந்த 17.5.2020 அன்று வீட்டில் இருந்த சித்திரைவேலை தடியால் அடித்துக்கொலை செய்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜன், அவருடைய கூட்டாளிகள் அரவிந்தகுமார், செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட ராஜன் உள்பட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story