5 பேருக்கு ஆயுள் தண்டனை


5 பேருக்கு ஆயுள் தண்டனை
x

வாலிபரை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஓட ஓட விரட்டி வாலிபரை வெட்டி கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வாலிபர் படுகொலை

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள பெரியவிளை பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருடைய மகன் விஜிக்குமார் (வயது 26). இவர் கடந்த 24-8-2012 அன்று ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் அதை தடுக்க வந்த சுயம்புலிங்கத்துக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியது.இந்த கொலை தொடர்பாக இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ் (45), பெரியவிளையை சேர்ந்த சுரேஷ் (35), விக்னேஷ் (34), பாஸ்கர் (42) மற்றும் வருண் என்ற வருண்குமார் (33) உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக சுரேஷ் உள்பட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ், மற்றொரு சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர் மற்றும் வருண் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். மேலும் சுயம்புலிங்கத்தை கொலை செய்ய முயன்றதற்காக பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதோடு வழிமறித்து தாக்கிய குற்றத்துக்காக 5 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. மற்ற 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.


Next Story