சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு ஆயுள் சிறை-நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு ஆயுள் சிறை-நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

திசையன்விளை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சாலிகுமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). தொழிலாளி இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, உவரி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார். இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த உவரி போலீசாரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டி உள்ளார்.


Next Story