வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுத்தை நெரித்து வாலிபரை கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கழுத்தை நெரித்து வாலிபரை கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள லகன்பூரை சேர்ந்தவர் பஜ்ரங்குமார் (வயது 19). இவர் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சித்துகுமார்(20) என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் தொழிற்சாலை கட்டிடத்தில் உள்ள அறையில் தங்கி இருந்தனர்.

கடந்த 4.9.2020 அன்று சாப்பிடும்போது ஊறுகாய் பாட்டிலை எடுத்து வருவதில் பஜ்ரங்குமார் மற்றும் சித்துகுமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பஜ்ரங்குமாரின் தாய் குறித்து சித்துகுமார் தவறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஜ்ரங்குமார், சித்துகுமாரை கழுத்தை நெரித்தும், சரமாரியாக தாக்கியும் கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஜ்ரங்குமாரை கைது செய்தனர். இதையடுத்து சித்துகுமார் கொலை வழக்கு விசாரணை, கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பஜ்ரங்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story