காதல் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


காதல் மனைவியை கொன்ற  தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

சுரண்டையில் காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது

திருநெல்வேலி

சுரண்டையில் காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

காதல் திருமணம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் உச்சிபொத்தை பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவருடைய மகள் பூங்கோதை (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அப்போது அங்கு வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியான கெஜேந்திரா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டு, திருப்பூரில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

மனைவி கொலை

கடந்த 2020-ம் ஆண்டு கணவன்-மனைவி சுரண்டைக்கு வந்து, வாடகை வீட்டில் குடியேறினர். அங்கு அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி பூங்கோதையை அவரது கணவர் கெஜேந்திரா கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கெஜேந்திராவை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட கெஜேந்திராவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.


Next Story