புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை


புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை
x

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது

கோயம்புத்தூர்

கோவை

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புரோட்டா மாஸ்டர்

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகே வீரபாண்டியை சேர்ந்த வர் பாண்டியராஜன் (வயது 37). புரோட்டா மாஸ்டர்.

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள் ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது ஓட்டலுக்கு உணவு வந்த அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கலாமணி (38) என்பவ ருக்கும், பாண்டியராஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

கலாமணிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

2 குழந்தைகளையும் கணவரின் உறவினர் வளர்த்து வருகிறார். இதனால் கலாமணி வடக்கிபாளையத்தில் வசித்து வந்தார்.

திருமணம்

இதற்கிடையே பாண்டியராஜனுக்கும், கலாமணிக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இதனால் பாண்டியராஜன் கலாமணியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் கலாமணியின் பெயரை மல்லிகா என்று மாற்றி, தொண்டாமுத்தூர் அருகே வ.உ.சி. வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் தகராறு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மாலை பாண்டிய ராஜன் வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களில் ஒன்றை எடுத்து கலாமணி குடித்து விட்டார். இதனால் பாண்டியராஜன், கலாமணி யுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் கலாமணி, தனது கணவர் மற்றும் கணவரின் தங்கை குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன், கலாமணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் மனைவியை கொலை செய்த பாண்டியராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு அளித்தார். அத்துடன் ரூ.2,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

----

Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore


Next Story