டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
கோவை,
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
டீ மாஸ்டர்
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 32). திருமணமாக வில்லை. இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.
இவர் மயிலேரிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
அவர் கடந்த 24-6-2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை அறிந்த பொதுமக்கள், சின்னராஜை பிடித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
இது குறித்து அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் சின்னராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட் டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக சின்னராஜ் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேக ரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சின்னராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.