பூதப்பாண்டியில்தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

பூதப்பாண்டியில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டியில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கத்தியால் குத்தி கொலை
பூதப்பாண்டி மேலரத வீதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 26), தொழிலாளி. இவருடைய நண்பர் தினேஷ் (21). பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் திருவிழாவின் போது இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வசந்த் (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இவர்களுக்கு இடையே தகராறு நடந்தது.
இந்த நிலையில் 24-1-2013 அன்று இரவு 9.30 மணி அளவில் ஆட்டோவில் வசந்த் 4 பேருடன் வந்து சுபாஷை கத்தியால் சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த தினேசுக்கும் கத்தி குத்து விழுந்தது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே படுகாயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்த் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. முதலில் வசந்த் தவிர மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சுபாசை கொலை செய்த குற்றத்துக்காக வசந்்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும். தினேசை கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.