தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

கோவையில் ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்


கோவையில் ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூலி தொழிலாளி

கோவையை அடுத்த பனைமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு அந்தப்பகுதியில் வசித்து வந்தார். அவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திருநங்கை கோபித்துக்கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். இதனால் அவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் படுத்து வந்தார்.

அதேபோன்று திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அலுவலக உதவி யாளராக வேலை செய்து வந்த அதேப்பகுதியை சேர்ந்த கவின்மூர்த்தி (27) என்பவரும் அங்கு வந்து படுப்பது உண்டு. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி கவின்மூர்த்தி அங்கு படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார். அன்று அதிகாலை 3.30 மணியளவில் கவின்மூர்த்தியை அங்கு படுத்து இருந்த ரமேஷ் எழுப்பி உள்ளார்.

குத்தி கொலை

அத்துடன் அவரை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கவின்மூர்த்தி, கத்தியை எடுத்து ரமேசின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தலைமறைவான கவின்மூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கவின்மூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலு தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து கவின்மூர்த்தியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.


Next Story