கணவரை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


கணவரை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கணவரை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிலம்பரசி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிலம்பரசி அரிவாளால் கணவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசியை கைது செய்தனர்.


மேலும் அவர் மீது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சிலம்பரசிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.





Next Story