ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
கோயம்புத்தூர்
ரேஸ்கோர்ஸ்
சேலம் தாதகப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் கொடுத்த தகவலின் பேரில் சிறை காவலர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story