பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு


பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
x

நெல்லையில் பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென உயிர் இழந்தார்.

திருநெல்வேலி

நெல்லையில் பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென உயிர் இழந்தார்.

ஆயுள் தண்டனை கைதி

நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் அதிசய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரின் மகன் கொம்பன் (வயது 50). இவரை சிவந்திபட்டி போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

சாவு

அதன்படி அவருக்கு கடந்த மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கொம்பன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கொம்பன் நேற்று காலையில் உயிர் இழந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் காலம் இன்றுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அதற்கு முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story