வாலிபரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


வாலிபரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
திருப்பூர்


திருப்பூரில் ஆபாச படம் பார்த்தபோது செல்போனை திருப்பி கேட்டதால் கோபமடைந்த தொழிலாளி வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

செல்போனில் ஆபாச படம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் திருப்பூர் வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் வீதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அறந்தாங்கியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (51). இவர்கள் இருவரும் வீரபாண்டியில் உள்ள பாரில் வேலை செய்தனர். அதனால் அவ்வப்போது கார்த்திக்கின் அறைக்கு சென்று மது அருந்துவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்த 19-6-2022 அன்று மதியம் கலைச்செல்வன், கார்த்திக்குடன் சென்று அவருடைய வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது கார்த்திக்கின் செல்போனை வாங்கி கலைச்செல்வன் ஆபாச படம் பார்த்துள்ளார். கார்த்திக் தனது செல்போனை கேட்க, அதற்கு கலைச்செல்வன் கொடுக்காமல் இருந்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாலிபரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

'எனது வீட்டில் வந்து மது குடித்து விட்டு எனது செல்போனையே தர மறுக்கிறாராயா?' என கூறி கார்த்திக் திட்டியுள்ளார். இதில் கோபமடைந்த கலைச்செல்வன் அங்கு கிடந்த இரும்பு குழாயால் கார்த்திக்கின் தலை மற்றும் கால்களில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் மயங்கி வீட்டுக்குள் விழுந்தார். அதன்பிறகு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு கலைச்செல்வன் அங்கிருந்து சென்று விட்டார். கார்த்திக் இறந்து விட்டார்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வாலிபரை கொலை செய்த குற்றத்துக்கு கலைச்செல்வனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.


Next Story