வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

2023-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு 'பத்ம விருதுகள்' வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மருத்துவர்கள் அல்லாத அரசு ஊழியர்கள், விஞ்ஞானிகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவலுக்கு www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரிடம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175- 233169 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கணட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story