'லிப்ட்' பழுதானதால் 2 பேர் பரிதவிப்பு


லிப்ட் பழுதானதால் 2 பேர் பரிதவிப்பு
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ பழுதானதால் 2 பேர் பரிதவித்தனர்.

சேலம்

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக காணப்படும். பழைய டீன் அலுவலகம் பகுதியில் உள்ள மருத்துவ கட்டிடத்தில் உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 அடுக்குமாடி கொண்ட கட்டிடமாக உள்ளதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வசதிக்காக 'லிப்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் 2 பேர் லிப்ட்டில் சென்றனர். அப்போது 2-வது மாடியை கடந்து சென்றபோது, திடீரென 'லிப்ட்' பழுதாகி நடுவில் நின்றது. இதனால் லிப்டில் சிக்கிக்கொண்ட 2 பேரும் பரிதவிப்புடன் கூச்சல் போட்டனர். உடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 'லிப்ட்' தொழில்நுட்ப பிரிவு பணியாளர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் முயற்சி செய்து பார்த்த போது, 'லிப்ட்' மீண்டும் செயல்பட தொடங்கியது. இதையடுத்து லிப்ட்டில் சிக்கிய 2 பேரும் ஒருவித பதற்றத்துடன் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தினால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story