கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல்விளக்கு தயாரிப்பு மும்முரம்


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல்விளக்கு தயாரிப்பு மும்முரம்
x

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தாராபுரம் அருேக அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தாராபுரம் அருேக அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அகல்விளக்கு

திருகார்த்திகை தீப திருவிழா வரும் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதனால் அகல்விளக்கு விற்பனை மும்முரமாக நடக்கும். தாராபுரம் அருகே திருமலைபாளையம் பகுதியில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குள்ள தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் பானை, சட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் தை பொங்கல் மற்றும் கோடை காலங்களில் மண்பானை செய்வது, கார்த்திகை மாதத்தில் அகல்விளக்குகள் செய்வது, திருவிழா காலங்களில் மண் பொம்மைகள் செய்வது என சீசனுக்கு ஏற்றார்போல், மண்ணால் ஆன கலயநயம் மிக்க மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில்தாராபுரம் பகுதியில் தற்போது அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாராகும் அகல் விளக்குகளை, வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.

விற்பனை

ஒரு விளக்கு 70 காசு வீதம் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து வாங்கிச் செல்லும் அகல் விளக்குகளை திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்திருவிழாவை எதிர்நோக்கி, அகல்விளக்குகள் விற்பனையும் அமோகமாக நடந்து வருவதால் அகல்விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்பாண்ட தொழிலாளி தண்டபாணி கூறியதாவது:-

வயதான மண்பாண்ட தொழிலாளியான எங்களுக்கு ஓய்வூதியம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மண் எடுத்து மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுவதால் மண் எடுப்பதில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எளிய முறையில் மண் எடுப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story