சிறைச்சாலை பாதையில் வெளிச்சம் வந்தது
சிறைச்சாலை பாதையில் வெளிச்சம் வந்தது
கோவை
கோவை மத்திய சிறைச்சாலை பாதையில் கடந்த 4 நாட்களாக தெருவிளக்குகள் ஒளிராமல் இருந்தது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, தெருவிளக்குகளை சீரமைத்து ஒளிர வைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கோவை மத்திய சிறைச்சாலை பாதையில் தெருவிளக்குகள் ஒளிராமல் கிடந்ததால், குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் இருந்தது. இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு காரணமான 'தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.