வால்பாறையில் லேசான சாரல் மழை
வால்பாறையில் லேசான சாரல் மழை
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், இன்னும் ஓரிரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பருவமழை நின்று கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் தேயிலை செடிகளில் கொசு, சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதித்து வந்தது. தற்போது மழை பெய்து உள்ளதால், தேயிலை செடிகளை பூச்சிகள் தாக்குவது குறையும். இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story