சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை...!
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது.
சென்னை,
தமிழ்நாடு பகுதிகளில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடம். அதேசமயம், வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீரென மழை பெய்தது. எழும்பூர், வேப்பேரி, பெரம்பூர், புரசைவாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இந்த மழையால் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம் அடைந்தனர்.
Related Tags :
Next Story