கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவைக்காக மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடக்கம்


கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவைக்காக மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடக்கம்
x

மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் இன்று மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது.

சென்னை

சென்னை,

சென்னையில் சுமார் 55 கிலோமீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது 2-ம் கட்டமாக 118 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் மெரினா கடற்கரை அருகில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழி சாலை வரை சுமார் 29.1 கிலோமீட்டர் தூரத்திற்கு 4-வது வழித்தட சேவைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் உள்ள மொத்த திட்டத்தை இரண்டாகப் பிரித்து பூந்தமல்லியில் இருந்து- போரூர் வரை ஒரு கட்டமாகவும், போரூரிலிருந்து - கலங்கரை விளக்கம் வரை ஒரு கட்டமாகவும் தனித்தனியாகக் கட்ட வேறுவேறு காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது முதற்கட்ட பணிகள் பூந்தமல்லி - போரூர் இடையே விரைவாக நடந்து வருகிறது.

தொடர்ந்து மெரினா கடற்கரை அருகில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கச்சேரி சாலை வழியாக திருமயிலை என்ற மயிலாப்பூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை 'பிளமிங்கோ' எஸ்-1352 ஏ என்ற எந்திரம் இன்று காலை (வெள்ளிக்கிழமை) 11:45 மணி அளவில் தொடங்குகிறது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.


Next Story