மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து
மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. கம்பி மத்தாப்பூகள் தயாரிக்கப்பட்டு வந்த இந்த பட்டாசு ஆலையில் நேற்று இரவு மின்னல் தாக்கியது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த ஒரு அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story