மின்னல் தாக்கி கார் தீப்பிடித்து எரிந்தது


மின்னல் தாக்கி கார் தீப்பிடித்து எரிந்தது
x

நெல்லை அருகே மின்னல் தாக்கி கார் தீப்பிடித்து எரிந்தது

திருநெல்வேலி

மானூர்:

நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடக்கு வாகைக்குளம் பள்ளி பகுதியில் உள்ள வீடுகளையும் மழை நீர் சூழ்ந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அலவந்தான்குளத்தை சேர்ந்த இருதயராஜ் (வயது 43) என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 4 பேருடன் மானூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று மின்னல் தாக்கியதில் கார் தீப்பிடித்தது. உடனடியாக காரில் இருந்தவர்கள் அதில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார், பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

1 More update

Related Tags :
Next Story