10½ லட்சம் வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண் இணைப்பு


10½ லட்சம் வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண் இணைப்பு
x
தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 1 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

ஆதார் எண் இணைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பாராட்டு சான்றிதழ்

விழுப்புரம் மாவட்டத்தில் இப்பணியில் படிவம்-6 பி மூலம் வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை 100 சதவீதம் முழுமையாக பெற்று அப்பணியை முடித்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட சிறப்பாக பணியாற்றிய 31 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் இத்திட்டம் 1.8.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 10 லட்சத்து 50 ஆயிரத்து 670 வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் விபரங்களை வாங்கி அதனை படிவம் 6 பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6 பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்து பயன்பெறுமாறு கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) சரஸ்வதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story