அரூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல்


அரூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

சாராயம் கடத்தல்

அரூர் சிட்லிங்கில் உள்ள வேடியப்பன் கோவில் அருகே கோட்டப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், சிங்காரவேலன், முனியப்பன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் சந்தேகமடைந்து, வாகனத்தில் சோதனை செய்தனர். அதில் காய்கறிகளை கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கூடைகளுக்கு அடியில் மறைத்து வைத்து, லாரி டியூப்புகளில் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கைது

மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈச்சாங்காடு கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் (வயது 42) என்பதும், அங்கிருந்து விற்பனைக்காக 500 லிட்டர் சாராயத்தை லாரி டியூப்புகளில் அடைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 500 லிட்டர் சாராயம் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, வேலாயுதத்தை கைது செய்து, தப்பி ஓடிய மற்றொரு நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story