விளையாட்டு மைதானத்தில் குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள்


விளையாட்டு மைதானத்தில் குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள்
x

சாத்தூரில் விளையாட்டு மைதானத்தில் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள விளைநிலங்கள், காலி இடங்கள், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் குடித்து விட்டு ஆங்காங்கே மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சாத்தூரில் விளையாட்டு மைதானம், விளைநிலங்கள் ஆகியவற்றில் ஒரு சிலர் இரவு நேரத்தில் மது அருந்துகின்றனர். பின்னர் அந்த பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story