சாராய வியாபாரி கைது
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வசந்த கிருஷ்ணாபுரம் மேற்கு புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் மணிக்கண்ணன் (வயது 53). இவர் மீது சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் மணிக்கண்ணனை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மணிக் கண்ணனை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story