குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள திருக்கருகாவூர் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் சதீஷ் (வயது 29). இவர் மீது சீர்காழி மற்றும் புதுப்பட்டினம் ஆகிய இரண்டு போலீஸ் நிலையங்களிலும் சாராயம் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் ஏற்பட்ட அடிதடி பிரச்சினையில் கைதாகி நாகப்பட்டினம் கிளை சிறையில் இருந்து வந்த சதீஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் சதீசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை சதீசிடம் போலீசார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவரை நேற்று போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story