சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது


சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
x

சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தாலுகா தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் யோகிதாஸ்(வயது 29). இவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்தபோது பகண்டை கூட்டு ரோடு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 114 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் யோகிதாஸ் மீது பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் சாராயம் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே இவரது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் யோகிதாசை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிந்துரை செய்தார். இதைஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் யோகிதாசை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story