சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் தாலுகா தெள்ளை கிராமத்தை சேர்ந்த மோகன் மகன் ராம்குமார் (வயது 33). இவர் சாராயம் விற்ற வழக்கில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ராம்குமார் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கினர்.


Next Story