சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
பேரணாம்பட்டு அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
பேரணாம்பட்டு அருகே கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29), சாராய வியாபாரி. இவர் மீது பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் 6 சாராய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் சாராய தொழிலில் ஈடுபட்டார். இதனால் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சரத்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத்குமாரிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story