சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x

வேலூர் அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் தாலுகா கணியம்பாடி அருகே உள்ள என்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் வேலு (வயது 59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாராயம் விற்ற வழக்கில் வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வேலு மீது சாராயம் விற்றது தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் ஜெயிலில் இருக்கும் வேலுவிடம் வழங்கினர்.


Next Story