சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x

பேரணாம்பட்டு அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே உள்ள அம்பேத்கார் நகர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 32). கள்ளசாராய வியாபாரியான இவர் மீது பேரணாம்பட்டு, குடியாத்தம் மது விலக்கு அமுல்பிரிவு ஆகியவற்றில் 13 கள்ளச்சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் 140 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த போது குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுததி காவலில் வைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரணண்டு மணிவண்ணன் பரிந்துரையின்பேரில் சரத்குமாரை போலீசார் குண்டத்தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத்குமாரிடம் வழங்கப்பட்டது.


Next Story