மதுபானம் விற்றவர் கைது


மதுபானம் விற்றவர் கைது
x

வடமதுரை அருகே மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்கமுத்து, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தென்னம்பட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆண்டிப்பட்டி சாலையில், தார் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தென்னம்பட்டியை சேர்ந்த முனியப்பன் (வயது 48) என்றும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 63 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனர்.


Next Story