டீக்கடையில் மதுவிற்றவர் கைது


டீக்கடையில் மதுவிற்றவர் கைது
x

பள்ளிபாளையம் அருகே டீக்கடையில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே மொளசி ராக்கிய வலசு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் டீக்கடையில் மது விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது சரவணன் மறைத்து வைத்து மதுவிற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story