சாராயம் விற்றவர் கைது
சாராயம் விற்றவர் கைது
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகம் ஏரவாஞ்சேரி ஊராட்சி காருதாக்குடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காருதாக்குடி சுடுகாட்டில் காருதாக்குடி காலனி தெருவை சேர்ந்த சங்கர் (வயது 42) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story