மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த ஏரிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்(வயது 55). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவரது ஓட்டலின் பின்புறம் உள்ள இடத்தில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது மது விற்பனை செய்து கொண்டு இருந்தது செந்தில் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story