நெகமம் அருகே மது விற்றவர் கைது


நெகமம் அருகே மது விற்றவர் கைது
x

நெகமம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அடுத்த கரப்பாடி பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் காலை மற்றும் இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் மற்றும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருசிலர் மறைவான இடத்தில் இருந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது போலீசார் அங்கு சென்று பார்த்த போது அங்கு தேவகோட்டையை சேர்ந்த பிரபாகரன் (வயது 35) என்பவர் மதுபாட்டில்களை வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story