மோட்டார் சைக்கிளில் மதுவிற்றவர் கைது


மோட்டார் சைக்கிளில் மதுவிற்றவர் கைது
x
நாமக்கல்

குமாரபாளையம்

குமாரபாளையம் பகுதியில் பல மதுபாட்டில்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய தம்பி தலைமையிலான போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது ஆனங்கூர் பிரிவு பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த குமாரபாளையம் காந்திபுரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் மோகன் (வயது 39) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவருடைய மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் வைத்து அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைத்தனர். அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story