மது விற்றவா்கள் கைது


மது விற்றவா்கள் கைது
x

மது விற்றவா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கோபி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியில் மது விற்றதாக வெள்ளாங்கோவிலை சேர்ந்த சிவக்குமார் (38) என்பவரை சிறுவலூர் போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story